18 Mar 2025

பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம்.

SHARE

பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டமானது திங்கட்கிழமை(2025.03.17) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

கடந்த காலாண்டுக்கான சிறுவர், மகளிர் மற்றும்  உளவளத்துணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் பற்றி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் அவர்களால் சமர்ப்பணம் செய்யப்பட்டதுடன், பிரதேச செயலக பிரிவில் சிறுவர்கள் மற்றும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. 

இதன்போது மேலும் கல்வி, சுகாதாரம், உட்பட திணைக்களங்கள்  சார்பில் சிறுவர்கள் மற்றும் மகளிர் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், சிறுவர் இல்லங்களின் நடவடிக்கைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. 

எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வகையில் திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் பிரதேச செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. 

பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: