20 Feb 2025

ரணவிரு சேவா அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்

SHARE

ரணவிரு சேவா அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்து 2016 ஆம் ஆண்டிலிருந்து ரணவிருசேவா சங்கம் செயற்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே 160 குடும்பங்களைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் யுத்தத்தினால் உயிர் நீர்த்துள்ளார்கள் அல்லது அவர்களது உடலின் அவையங்களை இழந்துள்ளார்கள். அவர்களுக்காக 39 வீடுகள் வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 

என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்துள்ளார். ரணவிரு சேவா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் வியாழக்கிழமை(20.02.2025) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாகு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

ரணவிருசேவா அமைப்பானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களைக் கொண்ட குடும்பங்களுக்காக பல்வேறு செயற்றிட்டகளை செய்து வருகின்றது. அவர்களுக்கு சக்கர நாற்காலி போன்ற உபகரணங்களை வழங்குவது, மலசலகூட வசதிகளை அமைப்பதற்காக 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நிதி உதவி வழங்குவது, அந்த இராணுவ வீரர்களுக்கான வைத்திய வசதிகளுக்காக 5 லட்சம் வரைக்கும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகின்றன, அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களது மருத்துவ தேவைகளுக்கு 75,000 ரூபாய் வரைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன, அந்த வைத்திய வசதிகளுக்குரிய செலவுகள் போதாது விடப்படும் இடத்தில் மேலும் ஒரு ஐந்து இலட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படுகின்றன. 

அந்த கடனை அவர்கள் நான்கு வருடங்களிலே அவர்கள் திருப்பி செலுத்தக் கூடியதாக இருக்கும். அதுபோல் அந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்தால், அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் தொகையும், அவர்கள் அவர்களுடைய பிள்ளைகள், கல்வி பொதுத்தர சாதாரண தரம் அல்லது உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்தால் அவர்களுக்கு 1500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவாகவும், அது போல் அவருடைய பிள்ளைகள் பல்கலைக்கழகம் அல்லது கல்வியற் கல்லூரிகளில் கல்வி கற்று வந்தால் அவர்களுக்கு மாதாந்த 3000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவாகவும் வழங்கப்பட்டு வருகின்றன அதைவிட உயர் படிப்புக்காக 5 லட்சம் ரூபாய் நிதியும் கடனாக வழங்கப்பட்டு வருகின்றன.

 அது மாத்திரம் இன்றி அவர்களுடைய வீட்டுத் திட்டங்களுக்காக 7 இலட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டு 11 ஆம் மாசம் 21ஆம் தேதிக்கு முன்னதாக யுத்தத்திலே உயிர் நீத்த இராணுவ வீரர்களின் பெற்றோர்களில் ஒருவராவது உயிரோடு இருந்தால் அவருக்கு மாதாந்த கொடுப்பனவாக 2250 ரூபாவும், பெற்றோர் இருவரும் உயிரோடு இருப்பார்களேயானால் அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக 3000; ரூபாவும் அவர்கள் வழங்கி வருகின்றார்கள்.

அது மாத்திரமின்றி 42 வியாபார தளங்களிலும், புட் சிட்டி போன்ற இடங்களிலும், இந்த குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் பொருட்களை கொள்வனவு செய்கின்றபோது அவர்களுக்கு விசேஷமான கழிவுகள் வழங்கப்படுகின்றன. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுக்கு உரிய அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. 

அது மாத்திரமன்றி மதஸ்தலங்கள் உள்ளிட்டவர் தேவைகளுக்கு அவர்கள் வெளிநாடு செல்வார்களாயின் அதற்குரிய விலை கழிவுகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது போன்ற பல சேவைகளை வழங்குவதற்காக ரணவிருசேவா அமைப்பினை நான் பாராட்டுகின்றேன். 

அவர்கள் இது மாத்திரம் செய்வது போதாது எங்களுடைய நாட்டுக்காக தங்களுடைய உயிரை நீத்த தங்களுடைய உடலில் பாதிப்பை அடைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறி உள்ள இராணுவ வீரர்களை ஒவ்வொரு வருடமும் இந்த ரணவீடு சேவா தினத்திலே நாங்கள் நிறைவு கூர வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

அதுபோல் தங்களுடைய குடும்பத்திற்கான வருமானத்தை கொண்டு வரும் ஒரு உறுப்பினரை நாட்டுக்காக தியாகம் செய்த அந்த குடும்பத்தினரையும் நாங்கள் பாராட்டி கௌரவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தொடர்ந்து எனது மாவட்ட செயலகமும் இந்த ரணவிரு சேவா சங்கத்தின் செயல்பாடுகளுக்கு எங்களாலான ஆதரவுகளை வழங்குவோம் என்று சொல்லிக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: