10 Feb 2025

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்இரத்த தான நிகழ்வு.

SHARE

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்இரத்த தான நிகழ்வு.

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(09.02.2025)  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் க.புவனேந்திரநாதன் முகாமைத்துவத்தின் கீழ் இரத்த வங்கியில் நடைபெற்றது. 

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபக தலைவர் ஆறுமுகவடிவேல் கோகுலரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் , கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டதுடன், சமூக அபிவிருத்தி நிலையமானது களுவாஞ்சிக்குடி பல பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு 25 ஆண்டு பூர்த்தியினை சிறப்பிக்கும் முகமாக இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. 

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையமானது இப் பிரதேசத்தில் பல்வேறு புத்திஜீவிகளையும் ,கல்விமான்களையும் உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: