ஜனாதிபதி மாற்றத்தை ஏற்படுத்திய விதம்,
வெற்றி பெற்றதைப் போன்று இந்த நாட்டை வெற்றி கொள்ள நாங்கள் என்றும் உங்களோடு இருக்கின்றோம்-
அமைச்சர் சுனில் ஹிந்துன்நத்தி.
ஜனாதிபதி மாற்றத்தை ஏற்படுத்திய விதம், வெற்றி பெற்றதைப் போன்று இந்த நாட்டை வெற்றி கொள்ள நாங்கள் என்றும் உங்களோடு இருக்கின்றோம் என அமைச்சர் சுனில் ஹிந்துன்நத்தி தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் தொழில் முயலுனர்களை தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை(30.01.2025) மட்டக்களப்பில் தொழில் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹிந்துநெத்தி தலைமையில் இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி வாங்கியினால் செயற்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 1500 பேர் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் மக்கள் மூண்டில் இரண்டு ஆணை வழங்கியது இந்த நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே. நாட்டிலுள்ள மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த நாட்டை இனமத மொழி பேதமின்றி கட்டியெழுப்புவதே எமது நோக்கம். எமது அமைச்சினூடாக அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிணைத்து விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வேண்டிய முதலீட்டு உதவகளை வழங்கி அவர்களை வலுப்படுத்துவதுடன், அரச ஊழியர்களும் தற்போது கடனில்தான் இருக்கிறார்கள் அவர்களையும் மீட்க வேண்டிய உள்ளது.
நீங்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம் ஆகும். விவசாயிகளுக்கு அதிகளவு பிரச்சனைகள் இருக்கின்றன. கஷ்டப்பட்டு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிரந்தர நெல் நிர்ணய விலை இல்லை. அவர்களுக்கு ஏற்றுமதியில் பிரச்சனை உள்ளது. அதனால் அவர்களது சொந்த இடத்திலேயே நாம் வர்த்தக கிராமங்களை உருவாக்க உள்ளோம்.
ஜனாதிபதி மாற்றத்தை ஏற்படுத்திய விதத்தைப் போன்று வெற்றி பெற்றதைப் போன்று வியாபாரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நாட்டை வெற்றி கொள்ள நாங்கள் என்றும் உங்களோடு இருக்கின்றோம்.
இந்நிகழ்விற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெனாண்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள், வங்கியின் வியாபார பிரிவு தலைவர் திளங்க சிசிர குமார, வங்கியின் கிழக்கு மாகாண ஊழியர்கள், மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சகல கிராம சேவக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment