15 Jan 2025

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

SHARE

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.பி அபயவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் குருத்துக்களால்  அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் செய்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு வழிபாடகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் களுவாஞ்சிக்குடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்திலும் நடைபெற்றது.

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பு பூஜை வழிபாடுகள் செவ்வாய்கிழமை களுவாஞ்சிக்குடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.ஆலய பிரதம குரு  மயூரவதனக் குருக்கள்  தலைமையில் இடம்பெற்ற இப்பூஜை வழிபாடுகளில் அப்பகுதியைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.





















SHARE

Author: verified_user

0 Comments: