மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன்
தைக்குளிர்த்தில் சடங்கு.
மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் விரசித்தி
பெற்ற செட்டிபாளையம் கண்ணகை அம்மன் தைக்குளிர்த்தில் சடங்கு செவ்வாய்கிழமை(14.012025)
வெகு விமர்சையாக நடைபெற்றது.
செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் இடம்பெறும் பிரதான சடங்குகளில் தைக்குளித்தில் சடங்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது.
அந்தவகையில் தைப்பொங்கல் தினத்தில் மாலைவேளையில் நெல்லுக் குற்றுதல் பூஜையுடன் ஆரம்பமாகி விநாயகர்பானை வைத்தல், அம்மன் குளிர்த்திப்பாடல் பாடுதல் போன்ற பாரம்பரிய பத்ததி முறைப்படி அம்மனின் திருக்குளிர்த்தில் இடம்பெற்றது.
ஆலய கட்டாடியார் தேவராசாவின் தலைமையில் நடைபெற்ற இச் சடங்கின்போது அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment