அதிகரித்து வரும் காட்டு வேளாண்மையால் விசாயிகள் பெரிதும் பாதிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி கமலந கேந்திர நிலையத்திற்குட்பட்டு செய்கை பண்ணப்பட்டள்ள வேளாண்மைச் செய்கையில் காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வயலில் வேளாண்மையைப் போன்றே வளரும் குறித்த காட்டு வேளாண்மையை அகற்றுவதற்கு விவசாயிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, பாரிய சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
தமது வயல் நிலங்களில் கட்டுக்கடங்காத வகையில் காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதகால் அதனை அகற்றுவதில் சில விவசாயிகள் நாட்டம் செலுத்தாத நிலையும் காணப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரிப்பால் எதிர்பார்த்த விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தொடர்ந்தும் இவ்வாறு காட்டு வேளாண்மையின் தாகத்தினாலும் மேலும் பாதிக்கப்படுவதனால் தமது இவ்வருட வாழ்வாதாரத் தொழில் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே இவ்வாறான நிலையிலும் விவசாயிகளுக்குரிய
மானியங்கள் வழங்கப்படுவதில் திருப்தியற்ற சூழல் காணப்படுவதாகவும், இவ்வாறான தாக்கங்களைக்
கட்டுப்படுவத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும், பாதிப்புக்களுக்கு ஏற்ற மேலதிக இழப்பீடுகனையும்
அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment