3 Jan 2025

வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைப்பு.

SHARE

வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(03.01.2025) வெள்ளிமலை பண்பாட்டு மண்டப தலைவர் ஆ.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மா.நடராசா, மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள், பிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

முள்ளாள் கிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், இம்மண்டபம் அமைக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத  நிலையில் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையிலேயேதான் இன்றயத்தினம் இம்மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்குறித்த மண்டபம் அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை இதன்போது அக்கிராம மக்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.























 

SHARE

Author: verified_user

0 Comments: