13 Jan 2025

குருக்கள்மடம் கிருஷ்ண ஆலயத்தின், திருப்பாவை தீர்த்தோற்சவம்.

SHARE

குருக்கள்மடம் கிருஷ்ண ஆலயத்தின், திருப்பாவை தீர்த்தோற்சவம்.

மட்டக்களப்பு குருக்கள்மடம் மிகவும் பிரசித்தி வாய்ந்த கிருஷ்ணர் ஆலயத்தின் திருப்பாவை சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை குருக்கள்மடம் கடலில் இடம்பெற்றது. 

மாதங்களில் மார்கழி நானே என கிருஷண பகவனின் முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இதில்  குறிப்பாக அதிகாலையில் திருப்பாவை என்பன பாடப்பட்டு, அதிகாலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுவது வழக்கமாகும். 

விரதங்களில் சிறந்த விரதமாக கருதப்படும் சொர்க்கவாயில் வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று, 30 நாட்கள்  திருப்பாவை பெருவிழா நடைபெற்று இன்றைய தினம் திங்கட்கிழமை   (13.01.2025) இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, சமுத்ரா தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது. 

கிரியை நிகழ்வுகள் யாவும் சோமேஸ்வரம் குருக்கள் தலைமைமையில் இடம்பெற்றதுடன் இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ன பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.






 

SHARE

Author: verified_user

0 Comments: