மட்டக்களப்பு மாநகர சபையின் இயேசு பாலகனின்
பிறப்பு ஒளிவிழா.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி நா.சிவலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் அருட்தந்தை யுமான அ.நவரெட்ணம் (நவாஜி) அடிகளார் மற்றும் சீயோன் தேவாலய த்தின் உதவிக் குரு க.திருக்குமரன் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாநகர சபை ஆணையாளரால் குழந்தை இயேசுவின் திருவுருவச் சிலை மாதிரி மாட்டு தொழுவதற்குள் வைக்கப்பட்டதன் பின் கலைநிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட அருட்தந்தையர்களால் இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் மகிமையின் ஆசியுறைகள் இடம்பெற்றன.
பின்பு கிறிஸ்மஸை வரவேற்கும் ஒளிவிழா நிகழ்வில் கரோல் கீதங்கள் வரவேற்பு நடனங்கள் நாடகங்கள் தனிப்பாடல் என்ன மாணவர்களின் கலைப்படைப்புக்கள் அரங்கை அலங்கரித் திருந்ததுடன், அதிதிகள் உரை இடம்பெற்றது பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாநகர சபையின் கணக்காளர் கே.அரசரெட்ணம் பொறியியலாளர் திருமதி.சித்திராதேவி மற்றும் நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
0 Comments:
Post a Comment