மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் 2425 குடும்பங்களைச் சேர்ந்த 7404 பேர் பாதிப்பு – சிறிநேசன் எம்.பி.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் உட்பட்ட மண்மனை மேற்கு பிரதேசம் வெள்ளப்பெருக்கினால் மிகவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை தொடர்பில் நேரில் அவதானிப்பதற்காக இன்றைய தினம்(சனிக்கிழமை 30.11.2024) அப்பிரதேசத்திற்கு நாம் சென்று நிலைமைகளை அவதானித்தது மாத்திரமில்லாமல் மன்முனை தென்மேற்கு பிரதேச செயலாளருடனும் வெள்ளை நிலமையின் தொடர்பில் கேட்டு அடைந்து கொண்டோம்.
என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஞாமுத்து சறிநேசன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(30.11.2024) அப்பகுதிக்குச் சென்று
வெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களின் நிலமை தொடர்பில பிரதேச செயலாளரிடம் கேட்டறிந்த பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர்
மேலும் குறிப்பிடுகையில்…
வெள்ளப்பெருக்கினால் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் 2425 குடும்பங்களைச் சேர்ந்த 7404 சேர்ந்த மக்கள் இப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும், ஏனைய பொது இடங்களிலும் தங்கி இருக்கின்றார்கள். இன்றைய தினம் சனிக்கிழமை மெதுமெதுவாக வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவருடைய வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் அரச திணைக் களங்களுடாகவும் அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார்கள் ஊடாகவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நாம் அறிகின்றோம்.
ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நாம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கச்சேரியிலே அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரையும் சந்தித்து கலந்துரையாடினோம். உலர் உணவுகளை வழங்குவதற்குரிய செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் வெள்ளத்தினால் போக்குவரத்தில் வீதி கட்டமைப்புகள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் படகு பாதைகள் என்பன பழுதடைந்து இருக்கின்றன அவற்றையும் சீர் செய்யவது தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசு தலைவர்களை விரைவாக சந்தித்து வெள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கு அதற்குரிய கூட்டம் விரைவில் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிவாரண சேவைகள் துரிதமாக நடைபெற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர்
உறவுகள் இவ்விடயத்தில் பார்வையாளர்களாக இருந்து கொண்டு அவதானிப்பாளர்களாக மாத்திரமின்றி
பங்காளிகளாகவும் இருந்து உதவிகளை வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம். ஏனெனில் பலர்
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அன்றாடம் தொழில் செய்கின்றவர்கள்கூட வீடுகளில் முடங்கி கிடக்கின்றார்கள் எனவே அவர்களுடைய
வாழ்வாதாரத்தை இந்த இடைக்காலத்தில் உயர்த்திவிட வேண்டும் எனவும் புலம்பெயர் மக்களிடம்
நான் அன்பாக வேண்டகோள் விடுகின்றேன் என அவர்
இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment