28 Nov 2024

றொட்டரிக் கழகத்தினால் வெள்ளத்தினால் பாதிப்புற்றுள்ள சித்தாண்டிக் கிராமமக்களுக்கு சமைத்து உணவு வழங்கி வைப்பு.

SHARE

றொட்டரிக் கழகத்தினால் வெள்ளத்தினால் பாதிப்புற்றுள்ள சித்தாண்டிக் கிராமமக்களுக்கு சமைத்து உணவு வழங்கி வைப்பு.

பலத்த அடைமழையால் பாதிப்புற்ற மக்களுக்கு றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையினால் பல்வேறுபட்ட மனிதாபிமான பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்றயதினம் வியாழக்கிழமை(28.11.2024) மாவட்டத்தில் வெள்ளத்தினால் பெரிதும் பாதிப்புற்ற சித்தாண்டி பகுதி மக்களுக்கு சமைத்த உணவுகளை அவர்கள் நேரில் சென்று வழங்கி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படும் சித்தாண்டிக் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கே அப்பகுதி அரச அதிகாரிகள், மற்றும் பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன்  ஒத்துழைப்புடன் இந்த சமைத்து உணவுகளை றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையினரால் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.

றொட்டரிக் கழகத்தின் ஆளுநரின் ஆலோசனையின் பெயரில் றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றெட்டரியன் எம்.ஜெகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த மனிதாபிமான பணியில் றொட்டரிக் கழகத்தின் செயலாளர் றொட்டரியன் கருணாகரன், றொட்டரியன் முத்துலிங்கம், றொட்டரியன் சங்கரலிங்கம்,  உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலையில் பாதிப்புறும் மக்களுக்கு தமது கழகம் முன்னின்று மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுபோல் தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ள அனர்த்திற்கு தம்மதால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு வருவதாக  றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றொட்டரியன் எம்.ஜெகன் தெரிவித்துள்ளார்.



















SHARE

Author: verified_user

0 Comments: