வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மீனவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்க அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது - கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலக.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் வெள்ளிக்கிழமை(29.11.2024) வரையில் 23141 குடும்பங்களைச் செர்ந்த 71618 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 18594 குடும்பங்களைச் சேர்ந்த 5827 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள். இதுவரையில் 55 இடைத்தங்கல் முகாம்களில் 2876 குடும்பங்களைச் சேர்ந்த 8283 நபர்கள் தங்கியுள்ளனர். வெள்ள அனர்த்ததினால் 73 வீடுகள் பகுதியளவில் சேதமைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற் செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து அப்பகுதியில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதால் பாதிக்கப்பட்ட அறிக்கைகள் முழுமையாக கிடைத்த பின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது நிவாரணங்கள் வழங்குவது சம்பந்தமாக அரசாங்கத்தினால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
கிழக்கு மாகாண விவசாயிகள், மற்றும் மீனவர்களது வெள்ள பாதிப்பு சம்பந்தமாக ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வியாழக்கிழமை (28.11.2024) மாலை மேற்கொண்ட கள விஜயத்தின் போது ஊடகங்களுக்கு அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலக இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் அவர்தெரிவிக்கையில்…
இதேவேளை இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கரையோர பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடமைகளும் சேதம் அடைந்தது சம்பந்தமாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. மாவட்ட தகவல்கள் முழுமையாக கிடைத்ததன் பின் மீனவர்களுக்கான நிவாரண உதவிகளும் வழங்கவுள்ளோம்.
கடந்த காலத்தில் எமது அரசாங்கத்தினால்
மீனவர்கள் கூறிய வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
மீனவர்களுக்கான தொழில் உபகரணங்களுக்குரிய நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளனதாக
அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment