26 Nov 2024

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றை அண்டி வாழும் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் உள்ள குளங்களில் பாரிய குளமாக திகளும் உன்னிச்சை குளம் உள்ளிட்ட அதிகளவிலான குளங்களில் நீர் நிரம்பி காணப்படுவதனால், அதில் அதிகளவிலான குளங்கள் திறந்து விடப்பட்டுள்ளதுடன், ஆறு, குளங்கள் மற்றும் தாழ்நில பகுதிகளை அண்மித்து வசிப்பவர்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பிரயாணங்களை மேற்கொள்ளும் வீதி மார்க்கங்களில் உள்ள பாலங்கள், நீரேந்து பகுதிகளால் பயணிக்கும் போதும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தத்துடன் இருப்பதுடன், வெள்ள அபாயம் ஏற்படுமிடத்து, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


SHARE

Author: verified_user

0 Comments: