26 Nov 2024

பலத்த மழை சிறிய குளங்கள் நிரம்பி வழிகின்றன, பிரதாக குளங்களும் வான்வாய்கின்றன வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனார்.

SHARE

பலத்த மழை சிறிய குளங்கள் நிரம்பி வழிகின்றன, பிரதாக குளங்களும் வான்வாய்கின்றன வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனார்.

வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது பெய்து வருகின்ற  இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி தருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிவதுடன், பிரதான குளங்களும் வான் வாய்ந்து வவதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பழுகாமம், பெரியபோரதீவு, வெல்லாவெளி, பொறுகாமம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருமண்வெளி, உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள் சிறி குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிகின்றன. 

இந்நிலையில் நவகிரிக்குளத்தின் நிர்மட்டம் 31அடி 5 அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32அடி 5அங்குலம், உறுகாமம் குளத்தின் நீரமட்டம் 18அடி 5 அங்குலம் அக்குளத்தில் 33 அங்குல மேலதிக நீர் வெளியேறுகின்றது, வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 18 அடி 4அஙகுலம், கட்டுமுறிவுக்குளத்தின் நிர்மட்டம் 12அடி 2 அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 4அடி வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 13அடி 6 அங்குலம் புணாணை அணைக்கட்டின நீர்மட்டம் 8அடி 6 அங்குலமாக உயர்ந்துள்தாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளரல்கள் தெரிவித்துள்ளனார். 

இந்நிலையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியைக கடக்க முற்பட்ட நபர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். 

இது இவ்வாறு இருக்கு பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதி, கோவில்போரதீவு வெல்லாவெளி பிரதான வீதி, திவுலானை வெல்லாவெளி பிரதானவீதி, மண்டூர் வெல்லாவெளி பிராதான வீதி ஆகிய பிரதான வீதிகரைள ஊடறுத:து வெள்ள நீர் பாய்வதனால் அப்பகுதிகளுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. 

பேய்துவரும் பலத்த மழையினால் வீதிஅருகில் நிற்கும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளதுடன், பலத்த காற்றும் வீசிவருகின்றது. 

கடும் மழை காரணமாக நவகிரிக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் சாத்தியமுள்ளதால் போரதீவுப்பற்று பிரதேசத்தின் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். 

மழை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்காக மேட்டுநிலப் பயிர்களும், நெற் பயிர்களும் வெள்ளத்தில் அள்ளுண்டு போய்யுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


























SHARE

Author: verified_user

0 Comments: