களுதாவளை பொதுநூலகத்தில் நடைபெற்ற வாசகர் வட்ட பரிசழிப்பு விழா.
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பொதுநூலகமும், வாசகர் வட்டமும், இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத பரிசழிப்பு விழா நிகழ்வு செவ்வாய்கிழமை(19.11.2024) களுதாவளை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.களுதாவளை பொதுநூலக உதவியளர் வ.கிருபாகரனின் ஒழுங்கமைப்பில், வாசகர் வட்டத்தின் தலைவர் இ.கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.அறிவழகன் பிரதம அதிபதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் இதன்போது மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.குகநேசன், மற்றும் ஆலயங்களின் நிருவாகத்தினர், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், வாசகர் வட்டத்தினர். என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு வாசிப்பின் மகத்துவம் தொடர்பிலான பேச்சுக்கள் நடைபெற்றதோடு, மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இடம்பெற்றன. மேலும் வாசகர் வட்டத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, வீட்டில் நூலகம் ஒன்றை நடாத்தி வரும் ஒருவரும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment