5 Nov 2024

தமிழரசுக் கட்சியை அழித்து விட வேண்டும் என்று பலவிதமாக திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன – சிறிநேசன்.

SHARE

தமிழரசுக் கட்சியை அழித்து விட வேண்டும் என்று பலவிதமாக திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன – சிறிநேசன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொன்மையான பழமையான கட்சியாக இருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சி 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா என்கின்ற உயர்ந்த மனிதரால் உருவாக்கப்பட்ட கட்சிதான் இது. இந்த கட்சியை அழித்து விட வேண்டும் என்று பலவிதமாக திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகளை 22 நாடுகள் சேர்ந்து அதனை மௌனிகளாக்கினர். இந்நிலையில் தமிழரசு கட்சிதான் தமிழினத்திற்காக உழைக்கின்ற கட்சியாக இருக்கின்றது. இந்த கட்சியையும் மௌனப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பேரினவாத கட்சிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான செயற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். எனவே பேரினவாத கட்சிகள் இந்த கட்சியை அழிப்பதற்காக பல தந்திரோபாயங்களையும் உத்திகளையும் கையாண்டு கொண்டிருக்கின்றனர். 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது அக்கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் திங்கட்கிழமை (04.11.2024) இரவு நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்காகவுமம், தமிழர் விடுதலை போராட்டத்தை அழிப்பதற்காகவும், மிகவும் நுட்பமாக செயற்பட்டது அந்த கட்சியாகும். இன்று அந்த கட்சி பூச்சிய நிலைக்கு வந்திருக்கிறது. 

அதுபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பல கூறுகளாக உடைந்து போய் உள்ளன. பொதுஜன பெரமுன எனும் கட்சியும் கடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற கட்சி ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்துக்கு மேலான வாக்குகளை பெற்ற அந்த கட்சி இன்றைய நிலையில் மூன்றரை லட்சம் வாக்குகளை பெற்று அதுவும் நிர்மூலமாகி கிடக்கின்றது. 

இராஜபக்சவோடு கூடிக் குலாவி எமது போராட்டத்தை சிதைத்த படகு கட்சியினர், அல்லது கார் சின்னத்தில் போட்டியிடும் கருணா போன்றவர்கள் இந்த தேர்தலில் படுமோசமாக வீழ்த்தப்படக்கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றன.  ஆகவே தமிழர்களுக்கு செய்கின்ற அநியாயத்துக்கு உரிய பரிசுகளை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். 69 இலட்சம் வாக்குகளை பெற்றபோது எனது ராஜாங்க அமைச்சர்கள் கூறினார்கள் இனி இராஜபக்ச குடும்பத்தினரை அசைக்க முடியாது என்றார்கள். அந்த ஆட்சி தொடர்ந்தும் இருக்கப் போகின்றது என்றார்கள் பின்னர் இரண்டு வருடங்களில் அவர்களின் ஆட்சியை மக்கள் அகத்தியுள்ளனர். எனது போராட்டத்தை அழித்த கட்சி தற்போது செல்லாக்காசாக போய் உள்ளது. “அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்பார்கள் அந்த வகையில் இந்த கட்சிகளை சிங்கள மக்களே நிராகரித்திருக்கின்றார்கள். ஆகவே எமக்கு அழிவுகளையும், அநீதிகளையும், ஏற்படுத்தியவர்கள் இன்று சிங்கள மக்களால் அகற்றப்பட்டிருக்கின்றார்கள். 

தேசிய மக்கள் சக்தி எனப்படும் கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்திருக்கின்றது. ஊழல் மோசடி இலஞ்சம் திருட்டு வீண்விரயங்கள் செய்யமாட்டோம் என சொல்கின்றார்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களின் கைது செய்வோம் என சொல்கின்றார்கள் ஆனால் அது செய்யப்படுமா? என நாங்கள் பார்க்க வேண்டும். இருப்பினும் அவர்கள் அதனை செய்வார்கள் என நாங்கள் வாக்களித்தால் நாங்கள் ஏமாளிகளாக போய் விடுவோம். 

திசைகாட்டிக்கு பின்னால் திசை தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு; நாம் கூறுவது இனப் பிரச்சனையை தீர்க்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் அவர்களிடம் கிடையாது. சமஸ்டியை தருவேன் என்றோ, 13ஆம் திருத்தத்தை தருவோம் என்றோம் தான் சொல்லமாட்டேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் கூறுகின்றார்.  

எனவே தமிழரசு கட்சி கட்சிதான் தந்தை செல்வவால் உருவாக்கப்பட்ட தமிழருக்கான கட்சியாகும். அந்தக் கட்சியை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அந்த கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை நாங்கள் அழிக்க வேண்டும். அவ்வாறு அளிப்பதன் மூலமாக கட்சியை வளர்த்துக் கொள்ள முடியும். கட்சியை நேரடியாகவோ மறைமுகமாகவோ அளிக்க நினைக்கக்கூடாது அது அவ்வாறு செய்தால் அது தமிழர்களுக்கு செய்கின்ற ஒரு விபரீதமாக அமைந்துவிடும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அதிக அளவு சுயேட்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. சுயேட்சைக் குழுக்களுக்கு மக்கள் அளிக்கின்ற வாக்குகளால் அவர்கள் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாது. எனவே நமது மக்கள் போராட்டங்களை காட்டிக் கொடுத்தவர்களுக்கும், போராட்டங்களுக்கு இடையூறு விழைவித்தவர்களுக்கும், வாக்களிக்கக்கூடாது. மாறாக தமிழர்களின் இருப்புக்காக, தமிழ் தேசியத்திற்காக போராடுகின்ற எமது தமிழ் தேசிய உண்மையான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். 

ஊழல், இலஞ்சம், திருட்டு, இல்லாமல் என்னால் அரசியல் செய்ய முடியும் முடியும் நான் சோரம் போகமாட்டேன், அமைச்சுப் பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, சோரம் போகமாட்டேன், என்பதை மக்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் சோரம் போகின்ற அரசியலில் அரசியலை செய்ய மாட்டோம் என அவர் இதன்போது தெரிவித்தார். 

இதன்போது அக்கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மகளிர் அணித் தலைவி திருமதி.க.றஞ்சினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: