24 Nov 2024

வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் செயலமர்வு.

SHARE

வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் இரண்டு நாள் செயலமர்வு நேற்று (23) திகதி மட்டக்களப்பில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்டெட் நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்தும் செயலமர்வின் முதல் நாள் செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட செயலமர்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களம், நில அளவை திணைக்களம், விவசாய திணைக்களம், வானிலை அவதான நிலையம், பிராந்திய சுகாதார பணிமனை, கால்நடை அபிவிருத்தி திணைக்களம், கல்வி திணைக்களம் உள்ளிட்ட மேலும் பல திணைக்களங்களின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உயரதிகாரிகள், அக்டெட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் 

என பலரும் கலந்து கொண்டதுடன், இச்செயலமர்வானது நாளைய தினமும் இடம்பெறவுள்ளதுடன், இச்செயற்திட்டமானது கிரான், வெல்லாவெளி மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளனம் குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: