20 Oct 2024

வவுணதீவில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான அவதானிப்புகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு.

SHARE

தேர்தல் தொடர்பான அவதானிப்புகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு.

வியூவ் எனப்படும் தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி அமைப்பின் தேர்தல் கால அவதானிப்புக்கள் தொடர்பான அறிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றது.  இதில் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

நம்முடைய வாக்கு நாட்டின் எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் வியூவ் பணிப்பாளர் ரவீந்திரடி சில்வி அவர்களின் வழிகாட்டுதலில், அவ்வமைப்பின் கிழக்கு மகாண இணைப்பாளர் அருள்நாயகம் தர்ஷிக்காவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வியூவ் அமைப்பின் பிரதம ஆலோசகரும், இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கினார். 

எதிர்வரும் நொவெம்பெர்  மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் நடத்துவற்குரிய அனைத்து முயற்சிகளையும் அனைவரும் எடுக்க வேண்டும். அதற்காக, தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி “வியூவ் நிறுவனம் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பையும் விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருவதன் தொடர் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இத்தகைய தெளிவூட்டல்கள்; இடம்பெறுகின்றன என  மஹிந்த தேசப்பிரிய  இதன்போது தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: