16 Sept 2024

தமிழ் மக்களின் தலைவர்கள் என தம்மை கூறிக்கொண்டவர்கள் தமிழ் மக்களை பிளையாக வழிநடத்தியுள்ளார்கள் - அருண்காந்த்.

SHARE

தமிழ் மக்களின் தலைவர்கள் என தம்மை கூறிக்கொண்டவர்கள்  தமிழ் மக்களை பிளையாக வழிநடத்தியுள்ளார்கள் - அருண்காந்த்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் மக்களின் தலைவர்கள் என தம்மை கூறிக்கொண்டவர்கள்  தமிழ் மக்களை பிளையாக வழிநடத்தியதன் விளைவாக அபிவிருத்தி மற்றும் உரிமை சார் விடயங்களில்  மிகவும் பின் தங்கிவிட்டனர்.

இலங்கை தேசிய ஜனநாயக கட்சியானது (NனுP) இம்முறை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரிப்பது  என இலங்கை தேசிய ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவரும், அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவருமான  நாரா.டி.அருண்காநத்; தெரிவித்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை(15.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் மக்களின் தலைவர்கள் என தம்மை கூறிக்கொண்டவர்கள்  தமிழ் மக்களை பிளையாக வழிநடத்தியதன் விளைவாக அபிவிருத்தி மற்றும் உரிமை சார் விடயங்களில்  மிகவும் பின் தங்கிவிட்டனர். குறிப்பாக இளைஞர்களின் தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களில் தமிழ் தலைவர்கள் ஒரு வீதம்கூட அக்கறை செலுத்தவில்லை. இதன் விளைவாக இளைஞர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். பல இளைஞர்கள் அவர்களுடைய வயதையும் தொலைத்துவிட்டு என்ன செய்வதென்றே தெரியாமல் சுற்றித்திரிகின்றனர். 

அதற்கு காரணம் எமது தலைவர்களிடம் இது தொடர்பில் எந்த திட்டங்களும் அவர்களது மூளையில் இல்லை. எமது மக்களின் வாக்குகளை பெற நினைக்கும் ஒவ்வொரு தலைவரும் எமது மக்களின் கனவுகளை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் எமது தமிழ் தலைமை ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க கோரியது. அதன் விளைவு யாருமே அறிந்திராத மகிந்த ராஜபக்ச  வெற்றிபெற்றுவந்து தாம் வெற்றிபெற காரணமாக இருந்த அந்த தலைமையையே அழித்தொழித்தார். அதன் பின் ராஜபக்சவை தோற்கடிக்க அடுத்த தேர்தலில் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றார். மீண்டும் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து எப்படியும் இனி ராஜபக்ச யுகம்தான் நீடிக்க போகிறது என்று தப்புக்கணக்கு போட்ட எமது தலைவர்கள் ராஜபக்சவுக்கு வாக்களிக்க கோரினர். ஆனால் அத்தேர்தலில் மைதிரிபால சிறிசேன வெற்றிபெற்றார். சில தமிழ் தலைவர்கள்  அவருடன் இருந்தாலும் அதன் ஊடாக தமிழ் இளைஞர்களுக்கு எந்த வகையிலும் தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களில் உதவவில்லை. இறுதியாக நடைபெற்றதேர்தலில் கூட  கோடாபயவின் வெற்றியை கணிக்கத் தவறிய எம்மவர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் கோடாபய பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

இவ்வாறாக எமது மக்களை உணர்வு பூர்வமாக முடிவெடுக்கவைத்து  முட்டுச்சந்தியில் நிற்க வைத்ததுதான் மிச்சம். ஆனால் எமது தலைவர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் கிடைத்துகொண்டுதான் இருந்தது. 

ஆகவே மக்களே இனிவரும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களது நகர்வுகளை சரியாக கணித்து அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இதற்கு எமது தலைவர் சரியான புள்ளிவிபரங்கள் அவதானிப்புக்கள், கலந்துரையாடல்கள் அவசியம். ஆகவே இம்முறை அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் அனுரவிற்கு பெறும் அலை தோன்றியுள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்தி நாமும் எமது மக்களுக்கு பெரும் பணியாற்றிடுவோம். உணர்வு பூர்வமாக அன்றி அறிவு பூர்வமான முடிவை எடுத்திடுவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

      





SHARE

Author: verified_user

0 Comments: