20 Sept 2024

இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி – மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி

SHARE

இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்திமட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி.

இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை எனவும், மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்  தெரிவித்தாச்சி அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார். 

இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் சமகால கால நிலவரங்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் சென்ற பின் இடம்பெற்ற மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

எனினும் மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அமைதி யான முறையில் தேர்தல்களை முன்னெடுப் பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. 

சனிக்கிழமை (21.09.2024) காலை 7.00மணி தொடக்கம் மாலை 4.00மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உரிய நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்கள் வேண்டப்படுகின்றார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: