சர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான இன்ரநியூஸின் மட்டக்களப்பு ஊடக இல்ல முன்னாள் நிருவாகியும் சுதந்திர ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ. ஹுஸைன் என்பவரின் தாய் பக்கீர்த்தம்பி செய்னம்பு உம்மா வியாழன் (19.09.2024) மாலை காலமானார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் காயர் வீதியில் வசித்து வந்த உறுகாமத்தைச் சேர்ந்த ஒன்பது பிள்ளைகளின் தாயான அன்னார் மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும்.
வயோதிபத்தின் காரணமான தளர்வினால் சிறிது காலம் சோர்வடைந்திருந்த நிலையில் காலமான அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை காலை (20.09.2024) ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலில் இடம்பெற்றது.
மரணச் செய்தியறிந்து, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஆகியோருட்பட இன்னும் பல பிரமுகர்கள் ஸ்தலத்திற்குச் சென்று உறவினர்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment