15 Aug 2024

வேட்புமனுத் தாக்கல் செய்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிக்கு அதரவு தெரிவித்து பட்டாசு கொழுத்தி ஆரவாரம்.

SHARE

வேட்புமனுத் தாக்கல் செய்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிக்கு அதரவு தெரிவித்து பட்டாசு கொழுத்தி ஆரவாரம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இந்நிலையில்  அவர் வேட்புமனு  தாக்கல் செய்ததை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அவரது வெற்றிக்கு உறுதுணை வழங்கும் வகையில் மட்டக்களப்பிலுள்ள ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் வியாழக்கிழமை(15.08.2024) மக்கள் தமது மகிழ்ச்சியை பட்டாசு கொழுத்தி வரவேற்கும் முகமாக ஆரவார வெளிப்படுத்தினர்.

இதன்போது ஆதரவாளர்களால் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் அவர்களின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்டவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எஸ்.சுரேஸ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின்  பிரதேச அமைப்பாளர்கள்  இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள்  பொதுமக்கள்  என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: