11 Jul 2024

ஐந்து தங்கப்பதக்கம் ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் தேசிய மட்டத்திற்கு தெரிவு

SHARE

(மு..மு.சிஹாம்)

ஐந்து தங்கப்பதக்கம் ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் மாகாண மட்ட தடகள போட்டியில் தடம்பதித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஒலுவில் பி.எம்.நெளசாத்.

8வது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மாகாண மட்ட விளையாட்டு விழாவானது 2024 - 07 - 08,09 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தை  சேர்ந்த பல வீரர்கள் பங்குபற்றிய போட்டியில் அம்பாறை, ஒலுவிலை சேர்ந்த பி.எம். நெளசாத் ஐந்து தங்கப்பதக்கம் ஒரு வெள்ளிப்பதக்கம் உள்ளடங்களாக ஆறு பதக்கங்களை சுவீகரித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.            

 400M  - தங்கப் பதக்கம்

400MH - தங்கப் பதக்கம்

100M  - வெள்ளிப் பதக்கம்

 4 × 400M  - தங்கப் பதக்கம்

 4 × 100M  - தங்கப் பதக்கம்

 4 × 400M Mix really  - தங்கப் பதக்கம்

மாகாணத்திற்கும் ஒலுவில் ஊருக்கும் பெருமை தேடித் தந்த இவருக்கு ஊர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: