தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு இன்று இடம் பெற்றது.
இன்று, ஜூலை மாதம் 28ஆம் திகதி, யாழ் வலம்புரி ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது.
இச்சந்திப்பில் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வது, கட்சிச் சின்னத்தைத் தெரிவு செய்வது, நிதியை முகாமை செய்வது, பரப்புரையைத் திட்டமிடுவது... போன்றவற்றுக்கான உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment