7 Jun 2024

பிளாஸடிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களால் விழிப்புணர்வு நடை பவனி.

SHARE

பிளாஸடிக்  கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களால் விழிப்புணர்வு நடை பவனி.

நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மைஎனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்துக்கான தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில்பிளாஸடிக்  கழிவு முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின்கீழ் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அலுவலக உத்தியோகத்தர்களினால் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகளை தாங்கிய வண்ணம் இந்தநடைபவனி  களுவாஞ்சிகுடி பேருந்து நிலையம் ஊடாக பொதுச்சந்தைப் பகுதிக்கு சென்றடைந்து, துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்பட்டன.

இதன்போது 200 இற்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: