உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனதிவு பிரதேச செயலகப் பிரிவில் பசுமை மாதிரி இல்லம் புதன்கிழமை(05.2024) திறந்து வைக்கப்பட்டதுடன் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு விழிப்புணர்வு சமூக நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. “சுற்றாடல் எம்மை காக்கும் நாம் சுற்றாடலை காப்போம்” என்னும் செயத்திட்டத்தின் ஊடாக வவுணதிவு பிரதேச செயலகப் பிரிவில் பசுமை மாதிரி இல்லம் இதன்போது திறந்து வைக்கப்பட்டதுடன் பொதுமக்களும் இணைந்து பயன் தரும் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு வவுணதிவு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இடம்பெற்றது.இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி.தர்மதாச மற்றும், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பசுமை மாதிரி இல்லத்தை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தனர்.
இதன் சிறப்பான பயன் தரும் செயல் திட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கு மலிவான விலையில் இந்தப் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டவுள்ளன. தொற்ற நோய்களிலிருந்து பொதுமக்களைக் காக்க நஞ்சற்ற உணவு வகைகளை மலிவான விலையில் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தபசுமை மாதிரி இல்லத்தில் மூலிகை வகைகள்,கீரை வகைகள், மரக்கறிகள், பூ மரக்கன்றுகள், என்ன பல வகையான பலமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் வவுனதிவு பிரதேச செயலாக உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment