1 Jun 2024

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல்.

SHARE

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல்.

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (31.05.2024) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் .தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப:பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாண் கிழக்கு மாகாண வபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், .பிரசன்னா, இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமஹே, சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபில் வைக்கப்பட்ட  மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின்  உருவப் படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களும், சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய அவர்களும் இணைந்து மலர் மாலை அணிவித்தனர். பின்னர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பின்னர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டிய கலந்து கொண்டிருந்தோர் வேண்டும், வேண்டும், நீதிவேண்டும், ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், ஊடக சுதந்திரம் வேண்டும், ஊடகங்களை அடக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கருத்துக்களையும் வெளியிட்டனர்.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கதாகும்.









































SHARE

Author: verified_user

0 Comments: