பொலிசாரை ஏவி விட்ட, கொலைக் கலாசாரத்தின் நாயகர்களாக அரசியல் செய்கின்றவர்களின் முகமூடிகள் அகற்றப்படல் வேண்டும்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு முன்னிட்டு கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் இடத்திற்கு சென்ற பொலிசார் பொலிசார் போன்றோ, அல்லது சாதாரண மக்களைப் போன்றோ நடந்து கொள்ளாமல் ஒரு ரவுடிக் கும்பலைப் போன்று செயற்பட்டுள்ளார்கள். அப்போது பொலிசார் மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த அஞ்சலி நிகழ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில் அகற்றியிருக்கின்றார்கள்.
இந்த மண்ணிலே இருந்து கொண்டு பொலிசாரை ஏவி விட்ட, கொலைக் கலாசாரத்தின் நாயகர்களாக அரசியல் செய்கின்றவர்களின் முகமூடிகள் அகற்றப்படல் வேண்டும்.
என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட் தந்தை கந்தைய ஜெகதாஸ் அடிகளார். தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கஞ்சிப்பானையை காலால் தட்டி வீழ்த்தி, அடுப்பினுள்ளே நீர் உற்றி மிகவும் சிறுமைத்தனமாக முறையில், காவல் துறை எனப்படுகின்ற ஸ்ரீ லங்கா அரசின் ஏவல் துறை ஒரு ரவுடிக் கும்பலைப்போல் ஒரு அடியாட்களைப்போல் மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்பட்டிருக்கின்றார்கள்.
பொலிசார் நடாத்திய இந்த அராஜகத்தையும், அக்கிரமத்தையும் கிழக்கு சிவில் சமூகத்தின் சார்பில் நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடகிழக்கு தழுவிய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்ற இச்சூழலிலே, நினைவேந்தல்களைச் செய்வதற்கு எந்த தடையும் இல்லை என நாட்டின் ஜனாதிபதி சொல்லியிருக்கும் இவ்வேளையிலே, பெலிசார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற மிகவும் கேவலமான வேலையைச் செய்திருக்கின்றார்கள்.
மட்டக்களப்பிலே இது நடப்பதற்குரிய காரணம் என்ன இதன் பின்னணியிலே எந்த சூத்திரமாரிகள் இருக்கிறார்கள்? ஏனெனில் முள்ளிவாய்க்காலிலே நாங்கள் பல லெட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தலைச் செய்கின்றபோது அங்கு யாரும் வரவும் இல்லை தடுக்கவும் இல்லை. மட்டக்களப்பிலே நாங்கள் கஞ்சி காச்சி பரிமாறியபோது பொலிசார் எம்மை அச்சுறுத்தினார்கள், அதன் உச்சமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது. இதன் பின்னணியிலே இருப்பவர்கள் யார்?
மட்டக்களப்பிலே இருக்கின்ற முன்னர் கொலையாளிகளாக இருந்து தற்போது வெள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றவர்களா? இதன் சூத்திரதாரிகளாக இருக்கின்றார்கள்? எனவே நாம் மிகவும் வன்மையாகக் கேட்டுக் கொள்வது யாதெனில் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட பொலிசாருக்கும் அந்த பொலிஸ் அதிகாரிக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இந்த செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்கின்றோம்.
இந்த மண்ணிலே இருந்து கொண்டு பொலிசாரை ஏவி விட்ட, கொலைக் கலாசாரத்தின் நாயகர்களாக அரசியல் செய்கின்றவர்களின் முகமூடிகள் அகற்றப்படல் வேண்டும். கொலையாளிகளுக்குப் பதவிகள் கொடுக்கின்றபோதும், மக்களைக் கொலை செய்கின்றவர்களுக்கு இவ்வாறான நிலமைகளைக் கொடுக்கின்றபோதும், இவ்வாறுதான் தமது செயற்பாட்டைச் செவ்வார்கள். ஏன் அவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளைச் செய்தபோது தாங்களும், காட்டிக்கொடுப்புக்களைச் செய்தவர்கள், எனவே இப்படுகொலை நிகழ்வுகளை நினைவு கூரக்கூடாது என்பதற்காக பொலிசாரை ஏவி விட்டு இவ்வாறு கீழ்த்தரமான விடையங்களை மேற்கொள்கின்றார்களா?
வருகின்ற காலத்தில் வெசாக் தினம் அனுஸ்ட்டிக்கப்படவுள்ளது. அன்றய நாட்களிலே வீதிகளிலே பந்தல்கள் அமைத்து சிற்றுண்டிகள் பரிமாறுவார்கள். அது பௌத்த சமயத்தினுடைய முக்கியமான நாள். ஆனால் அதே போன்றதொரு நிகழ்வைச் செய்கின்றபோது ஏன் இதனைக் குழப்புகின்றார்கள். இதுதான் பௌத்த தர்மமா? நாட்டினுடைய ஜனாயகமா? நாட்டினுடைய அவலத்தின் தன்மையா? அல்லது நாட்டை ஆளுகின்றவர்கள் தமிழர்களுக்கு இதுதைத்தான் செய்வோம் என்று காட்டுகின்றார்களா? அல்லது இணைக்குழுக்களாக இருப்பவர்கள் பொலிசாரை ஏவிவிட்டு இதனைச் செயகின்றார்களா? இதனை நாம் கிழக்கு மகாண சிவில் சமூகமாக இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்வாறு செயற்பட்ட பொலிசார ;மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தெழிவாக வலியுறுத்தி நிற்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment