அறநெறிப்பாடசாலை அசிரியர்களுக்கு புத்துணர்வுச் செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு புத்துணர்வுச் செயலமர்வு இன்று சனிக்கிழமை(11.08.2024) களுதாவளை கலாசார மட்டபத்தில் நடைபெற்றது.
மிகவும் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஒழுங்கமைப்பின்கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் அவர்கள் இதன்போது கலந்து கொண்டு ஆசிரியர்களுக்குரிய விளங்கங்களையும் பயிற்சிகளையும், வழங்கினார்.
இதன்போது களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர் க.பாஸ்கரன், களுதாவளை இந்து மாமன்றத்தின் தலைவர் ப.குணசேகரம், மற்றும் அறநெறிப்பாடசாலைகளின் ஆரிசியர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதில் தியனம், தலைமைத்துவம், பண்ணிசை, யோகாசனம், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், சைவ நீதி நூல்களும் விற்பனை செய்யப்பட்டன.
0 Comments:
Post a Comment