திருநாவுக்கரசு நாயனார் குருபூசை.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் சிவநெறிமன்ற அறநெறிப்பாடசாலையினால் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(05.05.2024) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் வழிகாட்டுதலில் சிவநெறிமன்ற தலைவர் அகில இலங்கை சமாதான நீதிவானும், சாமஸ்ரீ தேசகீர்த்தி தேசாபிமானி வல்லிபுரம் குணசேகரம் அவர்களின் தலைமையில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.றிஜித்தா கோகுலராஜ், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளரும் ஓய்வு நிலை முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளருமான நல்லதம்பி புவனசுந்தரம், சிவநெறி மன்ற உறுப்பினர்;, அறநெறிப் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கூட்டுப்பிரார்த்தனை பஜனை நிகழ்வை சிவநெறி மன்றத்தினரும் சிவநெறி மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களும் சிறப்பாக நடத்தினார்கள். தொடரந்தது ஆலய குரு சிவஸ்ரீ செ.சிவகரன் குருக்கள் ஐயா அவர்களது ஆசியுடன், திருநாவுக்கரசு நாயனாரின் வரலாறு சம்பந்தமான பேச்சுக்கள், பாடல்கள், பண்ணிசைகள் ஊடாக அறநெறிப் பாடசாலை மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
இந்நிகழ்வுகளில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களும் சிவநெறி மன்றத்தினரால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
“அறநெறிப்பாடசாலையும் சமூகமும்” என்ற தொனிப்பொருளில் இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.றிஜித்தா கோகுலராஜ், சிறந்த உரையை நிகழ்த்தினார்.
0 Comments:
Post a Comment