13902 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை(06.05.2024) 2023 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியது. இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலுமுள்ள பரீட்சை நிலையங்களில் அதிக உஷ்ண நிலையான கால நிலைக்கு மத்தியிலும் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் காலையில் இறை ஆசீர்வாதம் மற்றும் பெற்றோர்களின் வாழ்த்துக்கள் உடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இணைப்பு பரீட்சை 14 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மாவட்டத்தில் 10037 பாடசாலை பரீட்சாத்திகளும் 3865 தனியார் பரீட்சாத்திகளுமாக மொத்தம் 13902 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதே வேலை சகல பரீட்சை நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment