2 Apr 2024

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் பாரிய விபத்து.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் பாரிய விபத்து.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் செவ்வாய்கிழமை (02.04.2024) பாரிய விபத்துச் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றும் கெப் ரக வாகனமே வீதியருயிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்துச் சம்கவம் சம்பவித்துள்ளது.

இதன்போது இவ்வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர், இதன்போது சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிரி பிழைத்துள்ளார். சாரதியின் நித்திரை கண்கலக்கமே இச் சம்பவத்துக்கு காரணமாகலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

வேககட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தில் மோதியதுள்ளது.   இதனால் அருகிலிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 பாரிய மின்கம்பங்கள் உடைந்து முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உரிய கெப் ரக வாகனமம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: