6 Apr 2024

மகிழூரில் மாபெரும் வியாபார சந்தையும் களியாட்ட நிகழ்வும்.

SHARE

மகிழூரில் மாபெரும் வியாபார சந்தையும் களியாட்ட நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மகிழூர் கிராமத்தில் மாபெரும் வியாபார சந்தை வெள்ளிக்கிழமை(05.04.2024) மாலை மகிழூர் விளையாட்டு மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மகிழூர் மேற்கு மற்றும் எருவில் தெற்கு, எருவில் கிழக்கு, ஆகிய பகுதிகளில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர் இணைந்து முன்னெடுத்திருந்த இந்த வியாபார சந்தை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

அப்பகுதியிலுள்ள சுய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான  களமாக இச்சந்த திறந்து வைக்கப்பட்டள்ளது.

சமூக பொருளாதார, அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுபடுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன்அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முரளிதரன்மற்றும் லிவ்ற் நிறுவன பணிப்பாளர் திருமதி யாணு முரளிதரன் மகளிர் சுய உதவிக் குழுக்கள்பொதுமக்கள் எனப்பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

















 

SHARE

Author: verified_user

0 Comments: