5 Apr 2024

கோறளைப்பற்று வாழைச்சேனை - பேத்தாழையில் அறநெறி கல்வி விழிப்புணர்வும் ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்.

SHARE

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டலுக்கமைவாக கோறளைப்பற்று பிரதேச  இந்து  அறநெறிப்பாடசாலைகள்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேத்தாழை ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையும்,  ஸ்ரீ முருகன் ஆலயமும்  இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் குருபூசையும், அறநெறிக்கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் கடந்த மட்/ ககு/ பேத்தாழை  விபுலானந்தா கல்லூரி (தே.பா) ஒன்றுகூடல் மண்டபத்தில் அறநெறிப்பாடசாலையின் அதிபர் க.தனுஷன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பேத்தாழை  ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான காரைக்கால் அம்மையாரின் திருவுருவப்படம் தாங்கிய ஆன்மீக எழுச்சி ஊர்வலம் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தை வந்தடைந்து விசேட பூசையும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும், காரைக்கால் அம்மையாரை பற்றிய சிறப்பு சொற்பொழிவுகளும், அறநெறிப்பாடசாலைகளுக்கிடையிலான சைவசமய பொது அறிவு வினாவிடை போட்டிகளும் இடம்பெற்றன.


இதனை தொடர்ந்து ஊர்வல நிகழ்விலும், கலை நிகழ்வுகளிலும் பங்குபற்றிய மாணவர்கள், ஆசிரியர்கள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.தி.டினேந்திரராஜா சர்மா, கோறளைப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய ஒய்வு நிலை அதிபர் திருமதி.அருந்ததி, புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப்பாடசாலை அதிபர் சீ.நாகராசா, பேத்தாழை - வாழைச்சேனை வீரையடி விநாயகர் அறநெறிப்பாடசாலை அதிபர் ச.கார்த்தீபன், கண்ணகிபுரம் முத்தமிழருவி அறநெறிப்பாடசாலை அதிபர் ச.பிரதீபன், கல்குடா நாமகள் அறநெறிப்பாடசாலை அதிபர் க.உதயகுமார், நாசிவன்தீவு திருமூலர் அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி.க.மகேஸ்வரி, மருதநகர்  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி.உ.உருத்திரராணி, கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஷ்ணா அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி.பி.கிருஷாந்தி, வாழைச்சேனை ஸ்ரீ கைலாயபிள்ளையார் அறநெறிப்பாடசாலை அதிபர் ர.வர்ஷிக்கா, பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் த.சசிகுமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள்,  பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர். 








SHARE

Author: verified_user

0 Comments: