27 Mar 2024

சத்துமா உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு.

SHARE

சத்துமா உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு.

நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம் புதன்கிழமை (27.03.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும்  பின்தங்கிய பிரதேச பெண்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம் மற்றும் அதனோடு இணைந்த வெதுப்பாக தொகுதி இதன்போது உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டு இந்த புதிய உற்பத்தி நிலையத்திதை திறந்து வைத்து அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதன்போது மேலும் சிறுவர் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செல்;வி ஆடித் ஹோஸ் கலந்து கொண்டதுடன் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள, ;ஆயத்தியமலை பொலிஸ்நிலைய உயர் அதிகாரிகள் பிரதேச பொதுமக்கள் என்ன பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

பின்தங்கிய பிரதேச மக்களின் ஆரோக்கியத்தினை கட்டி எழுப்பு முகமாக குறைந்த விலையில் காலடியிலே தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெறும் பொருட்டே இந்த புதிய உற்பத்தி நிலையமும்  வெதுப்பாக தொகுதியும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: