13 Mar 2024

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி

SHARE

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல  மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி செவ்வாய்கிழமை(12.03.2024) மாலை வித்தியாலய அதிபர் .சிறிதரன் தலைமையில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதவிக்கல் விப்பணிப்பாளர் நேசகஜேந்திரன் இலங்கை நிருவாக சேவை ஓய்வு நிலை அதிகாரி மா.தயாபரன்தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர சா.ஜெயந்தன்ஓய்வு நிலை வைத்திய அதிகாரி மேகலா ரவிச்சந்திரன்ஓய்வு நிலை பிரதி கல்வி பணிப்பாளர் வை.தெய்வேந்திரன்

மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள்வளவாளர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்பழைய மாணவர் சங்கத்தினர்ஆலய குருமார்கள்அருட்சகோதர்கள்கல்விமான்கள்ஆசிரியர்கள்மாணவர்கள்கிராம பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் சுவட்டு நிகழ்ச்சிகள்மற்று அணிநடை என்பபோ விசேட அம்சமாக நடைபெற்றளஇதன் போது முதல் இடத்தை சம்பந்தர் இல்லமும்இரண்டாம் இடத்தை சுந்தரர் இல்லமும்மூன்றாம் இடத்தை அப்பர் இல்லமும் பெற்றுக் கொண்ன.

போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதங்கள்வெற்றிக்கேடயங்கள்சான்றிதழ்கள்என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதுடன்இல்லத்தலைவர்கள் வெற்றிக்கேடயங்களையும் பெற்றுக்கொண்டனர்

இதன் போது மேலும் குருக்கள்மடம் கிராமத்தை சேர்ந்த மூத்த ஆசிரியர்களுக்கான கௌரவமும் பழைய மாணவர் சங்கத்தினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

















SHARE

Author: verified_user

0 Comments: