மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்.
உலகவால் கிறிஸ்தவ மக்களின் விசேட வழிபாடுகளில் ஒன்றான தவக்காலத்தின் இறுதி வார முக்கிய வழிபாடுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(24.03.2024) சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் உணர்வு பூர்வமாகமுன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் ஆலய பங்குத்தந்தை நிக்சன் ஆண்டகை தலைமையில் சிறப்பு குறித்தோலை ஞாயிறு வழிபாட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. ஆலய வழிபாட்டுக்காக வந்த அடியார்களுக்கு ஆலயத்தின் பங்கு பிரிவினர்களால் குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குரிய குருதோலைகள் வழங்கப்பட்டு அதில் இயேசு ஆண்டவரின் சிலுவை வடிவில் அமைக்கப்பட்டு அதன் பின்பு ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
தவக்கால வழிபாடுகளை குறித்து ஆலய வளாகத்தில் ஊதா நிறத்திலான கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருந்தொகையான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
0 Comments:
Post a Comment