11 Mar 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வு.

SHARE

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வு.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு  கல்லடி ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மகளிர் தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(10.03.2024) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

திருமதி சுசித்ரா எல்ல கோவிட் காலப்பகுதியில்  கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 பில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிறப்பு அதிதிகளால் நினைவுச் சின்னம்  வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் மட்டக்களப்பில் கல்வி உள்ளிட்ட பல துறைகளிலும், சாதித்த பெண்களுக்கும் இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அலிசாஹீர் மௌலானா, ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்பிரதேச செயலாளர்கள், பணிப்பாளர்கள், உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள்மகளீர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 































SHARE

Author: verified_user

0 Comments: