14 Mar 2024

நலன்புரி நன்மை வேலை திட்டங்கள் முன்னெடுப்பு.

SHARE

நலன்புரி நன்மை வேலை திட்டங்கள் முன்னெடுப்பு.

அரசினால் கிழக்கு மாகாணத்தில் அஸ்வசும பயனாளிகளின் நன்மை கருதி பின்தங்கிய  பிரதேச செயலகத்தில் பகுதிகளில் நலன்புரி வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் தேசிய அடையாள அட்டை இல்லாத பயனாளிகளின் நன்மை கருதி பிரதேச செயலகங்கள் ஊடாக நடமாடும் சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இதன் மூலம் அஸ்வசும திட்டதிற்கு இரண்டாம் கட்டமாக இணைத்துக் கொள்ளவுள்ள பயனாளிகளை குறித்த காலத்திற்குள் உள்வாங்குவதற்காக இந்த செயற்றிட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள அஸ்வசும பயனாளிகளின் நன்மை கருதி  தேசிய அடையாள அட்டை இல்லாத பயனாளிகளை மையமாக கொண்டு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவதற்கான நடமாடும் சேவை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை(1403.024) இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச பிரதேச செயலாளர் .சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள் வதற்கான துரித நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தனஇதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்















SHARE

Author: verified_user

0 Comments: