18 Mar 2024

திருப்பழுகாமம் விபுலாந்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசழிப்பு விழா.

SHARE

திருப்பழுகாமம் விபுலாந்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசழிப்பு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலாந்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசழிப்பு விழா திருப்பழுகாமம் கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை(16.03.2024) நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் சி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மேலும் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ஜெ.பிரியதர்சன், பு.திவிதரன், நேசகஜேந்திரன், மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் கலை நிகழ்வுகளும், நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த வருடத்தில் விளையாட்டு, தமிழ் தினப்போட்டிகள் உள்ளிட்ட இணைபாட விதானங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும், வெற்றிக் கேடையங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: