14 Mar 2024

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் யுத்திய பரிசோதனையின் திடீர் நடவடிக்கை முன்னெடுப்பு.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் யுத்திய பரிசோதனையின் திடீர் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளையில் வைத்து  களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, யுத்திய சுற்றி வளைப்பு பரிசோதனையின் ஒரு அங்கமாக தீடீர் பரிசோதனை நடவடிக்கைளை வியாழக்கிழமை(14.03.2024) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட வாகனங்களை பரிசோதனை செய்யப்பட்டதுன், பயணிகள் இறக்கப்பட்டு மோப்பநாய்களுடன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்நெடுக்கப்பட்டிருந்தன.

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  போதைப்பொருளை சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து இதன்போது களுதாவளையிலும் இந்த யுக்திய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டடிருந்தது.

இதில் பரிசோனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிசாரால்  போதைப்பொருள் தடுப்பதற்கான, இஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.







 

SHARE

Author: verified_user

0 Comments: