8 Mar 2024

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் தினம்.

SHARE

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் தினம்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் உரிமைகள் சம்பந்தமாக பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில்தாயாக கரம் கொடுப்போம்என்னும் கருப் பொருளுக்கு அமைவாக  சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வு  ர்வலம் மட்டக்களப்பு லேக் வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகள் ஊடாகச் சென்று அரசடி வரை சென்றது.

இதன்போது கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய இந்த நிகழ்விற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மகளிர் அணி உறுப்பினர்கள்கட்சியின் பிரதிநிதிகள்பொதுமக்கள்என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டதுடன் சர்வதேச மகளிர் தினத்தில் தங்களது உரிமைகள் பாதுகாப்பு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன்பின்னர் தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மகளிக்காள கௌரவமும் வழங்கப்பட்டன.














SHARE

Author: verified_user

0 Comments: