வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மக்களுக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
லயன்ஸ் கழக பிராந்தியத் தலைவர் எம்.ரி.எம்.அனாப்க ஏற்பாட்டில் லயன்ஸ் கழக மாட்ட ஆளுனர் இஸ்மத் ஹமீட் அவர்களின் நேரடி வழிகாட்டளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதீதயாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டிருந்தார். மேலும் இதன்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜகதீஸன் லயன்ஸ் கழக இரண்டாம் நிலை துனை ஆளுனர் கயா உபசேன, மற்றும் காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், லயஸ்கழக உயர்சபை உரிப்பினர்கள் கழக அங்கத்தவர்கள் பயனாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 265 குடும்பங்களுக்கு தலா 6000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment