மிக நீண்ட காலமாக பழுதடைந்துள்ள களுவாஞ்சிகுடி தபால் அலுவலக கட்டடத்தை புனரமைப்பு செய்யுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது. இதனை புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இக்காரியாலயம் நீண்டகாலமாக பழுதடைந்துள்ளதனால் களுவாஞ்சிகுடி தபாலக நடவடிக்கைகள் வாடகை கட்டடத்திலேயே தற்போது வரைக்கும் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் தமது கிராமத்தில் மிக நீண்டகாலமாவிருந்து யுத்ததில் பாதிப்புற்ற நிலையில் இதுவரையில் புனரமைக்கப்படாமல் காணப்படும் தபால் காரியாலயத்தை புனரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment