20 Feb 2024

கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தியாலயத்தை தர முயர்த்தும் நிகழ்வு

SHARE

கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தியாலயத்தை தர முயர்த்தும் நிகழ்வு.

மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தியாலயத்தை தர முயர்த்தும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பிறன்சிஸ் தலைமையில் திங்கட்கிழமை (19.02.2024) இடம் பெற்றது.

சிறுவர் நேய பாடசாலையான கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தியாலயமானது தரம் ஒன்பது வரை இருந்து வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைய கல்வி அமைச்சினால் தர முயர்த்தப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் 10 மற்றும் 11 ஆம் தர வகுப்புக்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மலர் மாலை அணிவித்து, பாண்டு வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து 10 மற்றும் 11 ஆம் தரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றன.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் சுராஜ்சிதானந்தா மகராஜ் அவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து விசேட மற்றும் பிரதம அதிதி உரைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து அரசினால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதகுருமார், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருமதி சாமினி ரவிராஜா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி.சீ.சுபாஹரன், கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: