மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 76 வது சுதந்திர தின நிகழ்வு.
தற்கால சூழலில் பொருளாதார ரீதியாக மீண்டெழுதலின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்களினால் 76வது சுதந்திர தின விசேட உரை இதன்போது நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் சுதந்திர தினத்தை ஒட்டியதான பிரதேச செயலகத்தின் முன்மாதிரியான செயற்திட்டங்களாக கல்வியில் ஆர்வம் மிக்க வசதி குறைந்த 27 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,
பொதுமக்கள் 90 பேருக்கான வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. இதனை அரசின் நிதி ஒதுக்கீடுகள் இன்றி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது
அதனை தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு செயற்திட்டங்களின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வீடுதோட்ட பயனாளிகள் மற்றும் நாற்றுமேடையாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிராம சக்தி கடன் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் டெங்கு பரவலை தடுத்தல், சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பசுமை மேம்பாடு அடிப்படையில் அலுவலக வளாகத்தினுள் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுவதரணி மூலிகைப்பயிர் வாரம்" எனும் தொனிப்பொருளின் கீழ் பிரதமரினால் முன்மொழியப்பட்ட நாடுபூராகவும் மூலிகைக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் அவர்களினால் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றதுடன், பிரதேச செயலகத்தின் 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment