வீடுகளிம் புதிர் எடுக்கும் நிகழ்வு.
தமிழ் மக்கள் தைப் பூச நன்நாளில் புதிர் எடுக்கும் வழக்கத்தை தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் வியாழக்கிழமை (25.01.2024) தைப் பூச தினத்தன்று வயலிலே நெற்கதிர்கள் எடுத்து வந்து தங்களது வீட்டு வாயிற் கதவுகளிலே வைத்து பின்னர் அதனை நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கேற்றி குங்குமம், திருநீறு, சந்தணம், மஞ்சள், காசு, தங்கம், வெற்றிலை, பாக்கு, உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு நெற்கதிரையும் வைத்து சுவாமி அறைக்குள் எடுத்துச் செல்வார்கள்.
பின்னர் சுவாமி அறையிலே வைத்து அதனை பூஜை செய்து வழிபாடு செய்வவதை வழங்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இதுபோன்று தைப் பூச தினமான வியாழக்கிழமை (25.01.2024) மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்களின் வீடுகளிலும் இடம்பெற்றதை நாம் காண முடிந்தது.
0 Comments:
Post a Comment