9 Jan 2024

களுவாஞ்சிகுடியில் பொலிசாரால் முன்நெடுக்கப்பட்ட யுத்திய பரிசோதனை.

SHARE

களுவாஞ்சிகுடியில் பொலிசாரால் முன்நெடுக்கப்பட்ட யுத்திய பரிசோதனை.

பொலிசார் முன்நெடுத்துள்ள யுக்திய செயற்பாட்டின் கீழ் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஒர் அங்கமாக செவ்வாய்கிழமை(09.01.2024) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இதன்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போரூந்துகள் களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு பயணப் பொதிகள், அனைத்தும் பரிசோதனைக்குட்பட்டுத்தப்பட்டன. 

அதுபோல் போரூந்துகளும், முற்றாக பொலிசாரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு போதைப் பொருள் தகவல்களை வழங்குவதற்குரிய தொலைபேசி இலங்கங்கள் எழுதப்பட்ட இஸ்ரிக்கரிகளும், பேரூந்துகளில் பொலிசாரால் ஒட்டப்பட்டன. 

களுவாஞ்சிகுடி பொலிசாரால் முன்நெடுக்கப்பட்ட இப்பரிசோதனை நடவடிக்கையில் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக்க இரத்நாயக்க, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயவிக்கிரம, மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: