8 Jan 2024

விபுலானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வும், பரிசழிப்பு விழாவும்.

SHARE

விபுலானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வும், பரிசழிப்பு விழாவும்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை விபுலானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வும் பரிசழிப்பு விழாவும் சனிக்கிழமை(06.01.2024) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பாலர் பாடசாலை மாணவர்கள், வைத்தியர், சட்டத்தரணி, பொலிஸ், மதத் தலைவர்கள் போன்று ஆடைகள் அணிந்து அதிதிகளை வரவேற்றனர்.

சிறார்களின் ஆடல், பாடல் நடனம், உள்ளிட்ட பலவகையான கலைத்துவப் படைப்புக்கள் இதன்போது மேடையேற்றப்பட்டதுடன், கலந்து கொண்ட பாலர் பாடசாலை சிறார்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பாலர்பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் குணகேசரம்; தலைமையில் பாலர் பாடசாலை ஆசிரியர்களான கு.கஸ்தூரி மற்றும் சோ.ஸோபிகா ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலங்களின் நிருவாகத்தினர், பொதுமக்கள், பழைய மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறார்களின் கலைநயத்தைக் கண்ணுற்றனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: